கோவையில் அரசுப் போட்டித் தேர்வு நடக்கும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் இன்று (16.09.2017) ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது.

இந்த மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றது. 



அதன்படி, இன்று அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கோவை மாவட்டத்தில் 38 மையங்களில் காலை ஒருபகுதியில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் 13,849 நபர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 3,518 நபர்கள் தேர்வெழுதவில்லை, இத்தேர்வினை கண்காணிக்க 38 முதன்மை கண்காணிப்பாளர்களும், 38 கூடுதல் கண்கானிப்பாளர்களும், 9 பறக்கும் படையைச் சேர்ந்த அலுவலர்களும் பணியாற்றுகின்றனர். மேலும், இத்தேர்விற்கென பல்வேறு நிலையிலுள்ள 1621 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

இத்தேர்விற்கான ஏற்பாடுகள் முன்னரே அனைத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்தில் அனைத்து மையங்களிலும் சிறப்பாக தேர்வுகள் நடைபெற்றது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறினார். 

இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தேர்வு கண்கானிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...