மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை விளக்கும் 'ஐம் ஸ்பெசல்' காலண்டர் வெளியீடு


விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகளின் சாதனைகள வெளிப்படுத்தும் விதமாக, 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் சாதனைகளை விளக்கும் 'ஐம் ஸ்பெசல்' (I am Special) என்ற பெயரில் 2018-ம் ஆண்டுக்கான காலண்டர், கோவை சுவர்கா பவுண்டேஷனால் வெளியிடப்பட்டது. 



இந்த காலண்டர் வெளியிட்டு விழா கோவை இஎஸ்ஐ மருத்துவமனை அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இந்தியா முழுவதிலும் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வரும் 12 விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள் 'ஐம் ஸ்பெசல்' காலண்டரில் இடம் பெற்றுள்ளன.



சுவர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா இறைவாழ்த்துடன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'மாற்றுத்திறனாளிகளான ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து அனுதாபங்களை எதிர்பார்ப்பதில்லை மாறாக, எங்கள் திறமைகளுக்கு ஆதரவை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 

நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து எங்களை மதிப்பிடாமல் நாங்கள் யார்? என்பதனை வைத்து எங்களை மதிப்பிடுங்கள். இந்த காலண்டர் வெளீயீட்டு நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலமாக எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கும் அனைவருக்கும் நன்றி' என்றார்.



தொடர்ந்து, 'ஐம் ஸ்பெஷல்' காலண்டரில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள்  காலண்டரை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...