கண்துடைப்பிற்கா குறைதீர்ப்பு முகாம் ? காதில் பூசுற்றும் அதிகாரிகள்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்துடைப்பிற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி கோவை மாவட்டம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் இளைஞர் காதில் பூ சுற்றிக் கொண்டு இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது:-

"கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது புகார், குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு வழங்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை குறித்து ஆட்சியரின் உதவியாளர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய பதில் வருவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் வழங்கியுள்ள மனுவின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பினாலும் முறையான தகவல் இல்லை.

எங்களது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் எதற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெறுகிறார்கள் என்பதே தெரியவில்லை. மனுக்களை பெரும் ஆட்சியர் அதனை உரிய அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகிறாரா? அல்லது அந்த மனுக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா? இல்லை மக்கள் நலனுடன் ஆட்சியர் செல்படுகிறார் என பொதுமக்கள் காதில் பூ சுத்துவதற்காக இந்த குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறதா என பல்வேறு கேள்விகள் உள்ளன" என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...