கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் முக்கிய அணையாக உள்ளது. இந்த அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்திற்கும் வழங்கப்படுகிறது. இது தவிர, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்தாண்டு பருவமழை சரிவர பொழியாத நிலையில் கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான அணைகள் வறண்டன. 

இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் ஆழியாறு அணை, சோலையார் அணை, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வர துவங்கியுள்ளது.

அணைகளில் நீர்மட்டம் விபரம்:-

சோலையார் அணையின் நீர்மட்டம் 130.53/160 அடி. தற்போது, 5549.30 கன அடி நீர்வரத்து உள்ளது. 886.57 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையாறு அணை நிர் பிடிப்பு பகுதியில் 170 மி.மீ மழை அளவு உள்ளது.

பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 35.40/72 அடி ஆகும். தற்போது, 5186 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 903 கன அடி நிர் வெளியேற்றப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 127 மி.மீ மழை அளவு உள்ளது. 

86.80/120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது, 1154 கன அடி நீர்வரத்து உள்ளது. இங்கிருந்து 9 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆழியாருக்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதியில் 24.6 மி.மீ மழை பெய்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம்- உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 43.73/60 அடி ஆகும். 640 நீர் வரத்துள்ளது. இங்கிருந்து தற்போது, 1233 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 20 மி.மீ மழை அளவு உள்ளது.

அமராவதி அணையின் மொத்த நீர்மட்டம் 79.30/90 அடி ஆகும். இங்கு நீர்வரத்து 1578 கன அடி ஆக உள்ளது. அமராவதி அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 18 மி.மீ மழை அளவு உள்ளது. 

கோவை மாவட்டம், வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவக்கமாக 109 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது. வால்பாறைக்கு உட்பட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை விபரம் பின்வருமாறு:-

அப்பர் நீராறு - 172 மி.மீ, லோயர் நீராறு - 185 மி.மீ, காடம்பாறை - 55 மி.மீ, சர்க்கார்பதி - 110 மி.மீ, வேட்டைக்காரன் புதூர் - 26.6 மி.மீ, மணக்கடவு - 30.4 மி.மீ, தூணக்கடவு - 70 மி.மீ, பெருவாரிபள்ளம் - 82 மி.மீ, அப்பர் ஆழியார் - 32 மி.மீ.

பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகள்:-

காங்கேயம் - 5 மி.மீ, நவமலை - 16 மி.மீ, பொள்ளாச்சி - 50.8 மி.மீ, நல்லாறு - 22 மி.மீ, நெகமம் - 21 மி.மீ, சுல்தான்பேட்டை -16 மி.மீ, பொங்களுர் - 10 மி.மீ, உப்பாறு - 5 மி.மீ.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...