தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் தேர்தல் வைத்தால் அதிமுக வெற்றிபெருவது சிரமம்- சூலூர் சட்டமன்ற உறுப்பினர்


18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது வருத்தமளிப்பதாகவும், இந்த 18 தொகுதிக்கு இடைத்தேர்தல் வைத்தால் அனைத்திலும் அதிமுக வெற்றி பெறுவது சிரமம் என சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை காமநாயக்கன்பாளையம் பகுதியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியவர்களை தகுதி நீக்கம் செய்தது வருத்தமளிக்கிறது. இந்த தகுதி நீக்கம் அதிமுக-விற்கு பலவீனமாக இருப்பது மட்டுமல்லாமல் அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக வெற்றி பெறுவது சிரமம்.

பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பலமுறை சபாநாயகர் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. அதற்கான தண்டனை தான் இது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும். திமுகவுடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதால் கூட்டணி வைத்தால் தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றி பெற முடியும். 

ஏற்கனவே தினகரனுக்கு ஆதரவாக தான் பேசிவந்தேன். ஆனால் அவரது நடவடிக்கை திமுக-விற்கு சாதகமாக இருந்ததால் அவர் மீது வைத்த நம்பிக்கை போய்விட்டது. தினகரன் அணியில் இணைந்தால் அமைச்சர் பதவி தருவதாக அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திருப்பூர் சிவசாமி உள்ளிட்டோர் தன்னிடம் பேசினர். ஆனால் தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை"

இவ்வாறு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...