வேளாண் பல்கலையில் நகர்புற தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை அகற்ற எளிய கருவிகள்

நகர்புறங்களில் தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை அகற்ற எளிய இரு உபகரணங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கி அவைகளை மக்களிடையே பிரபலமாக்கிவருகின்றது. பொதுவாக நகர்புறங்களில் அரிசி, கோதுமை மற்றும் துவரை பருப்புகள் 20- 25 கிலோ வரை சேமித்து வைக்கும் பழக்கமும், சில இல்லங்களில் தங்கள் சொந்த கிராமத்தில் விளைவித்த அரிசி மற்றும் துவரை பருப்புகள் 1 முதல் 2 மூட்டை வரை சேமிக்கும் பழக்கம் உண்டு.

நகர்புற வீடுகளில் சேமிப்பு தானியங்களில் ஏற்படும் பூச்சிக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துக்களை பயன்படுத்த முடியாது. இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல் பூச்சிக்களை தானியங்களிலிருந்து அகற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இரண்டு உபகரணங்களை பரிந்துரை செய்கின்றது.



1. கலனில் சேமிப்போர்:-

அரிசி, கோதுமை மற்றும் துவரை பயிர்களை 20- 25 கிலோ வரை எவர்சில்வர் கலனில் சேமிப்போர் “குழாய் வடிவ பொறி” என்ற உபகரணத்தைப் பயன்படுத்தலாம்.

குழாய் வடிவப் பொறி

குழாய் வடிவமைப்பு கொண்ட இப்பொறியில் மேற்பகுதியில் 2 மி.மீ துவாரங்கள் உள்ளன. கீழே கூம்பு வடிவத்தில் பிளாஸ்டிக் மூடி உள்ளது. பொறியின் மேற்பகுதியிலும் ஒரு பிளாஸ்டிக் மூடி உள்ளது. மேற்பகுதி மூடி மட்டும் வெளியே தெரியும்படி இப்பொறியை நேராகத் தானியத்தில் வைக்க வேண்டும். தானியங்களில் உள்ள பூச்சிகள் அங்கும் இங்கும் நடமாடும் போது துவாரங்கள் வழியாக பொறியில் நுழைந்து கீழ் நோக்கி வரும் போது பொறியில் அடிபாகத்தில் பொருத்தபட்டுள்ள புனல் வடிவ அமைப்பினால் சறுக்கப்பட்டு கூம்பு வடிவ மூடியில் அகப்பட்டு கொள்கின்றன. வாரம் ஒரு முறை பொறியை வெளியில் எடுத்து பூச்சிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.



2. மூட்டைகளில் அரிசி சேமிப்போர் கவனிக்க:-

இச்சேமிப்பு முறை குறைந்தது 2- 3 மாதம் வரை தொடர்வதாலும், சரியான பூச்சி கண்காணிப்பு முறை இல்லங்களில் பொதுவாக சற்று சிரமம் ஆதலால் இவ்வகை சேமிப்பில் வண்டுகள் அதிகம் தென்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அதிக அளவு வண்டுகள் மூட்டையில் இருக்கும் போது ஒன்று (அ) சில வண்டுகள் மூட்டைகள் மேலே ஊர்ந்து செல்லும். இந்நிலையில் மூட்டையில் தானியங்களில் வண்டுகள் அதன் முட்டைகள் மற்றும் புழுக்கள் இருக்கும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கிய பூச்சிகளின் முட்டைகளை அழிக்கும் உபகரணம் (இந்திய காப்புரிமை எண் 198434) பயன்படுத்தலாம். வண்டுகள் சேமிக்கத் துவங்கும் காலத்தில் குறைந்த அளவே காணப்பட்டாலும் அவைகள் இடும் முட்டைகள் பல மடங்கு பூச்சிகளாக பெருகி சேமிப்பில் பலத்த சேதத்தை விளைவிக்கின்றன.

இவ்வண்டுகள் மட்டும் அன்றி அவைகளின் முட்டைகள், புழுக்கள் முதலியவற்றை அழிக்க இக்கருவிகயைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு இக்கருவியை அனைவராலும் வாங்கி பயன்படுத்தமுடியாது. எனவே இக்கருவியை வைத்து தானியங்களை சுத்தம் செய்து தரும் (மாவு மில் சென்று நாம் 5-10 கிலோஅரிசி, கோதுமை, மிளகாய் அரைப்பது போல்) மில்களுக்கு (அ) கடைகளுக்கு எடுத்து சென்று சுத்தம் செய்து கொள்ளலாம்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...