மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மழை மற்றும் வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மழை மற்றும் வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் உபகரணங்கள் போதுமான அளவில் வைத்துக்கொள்ள அனைத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தின் மூலம் மாநகர நல அலுவலர், மழை மற்றும் வெள்ள காலங்களில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

1. குடிநீரை நன்கு (நீர்குமிழிகள் வரும் வரை) காய்ச்சி குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

2. தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். 

3. ஆங்காங்கே தேங்கும் குப்பை கூளங்கள், அழுகிய பொருட்கள் மூலம் ஈக்கள் உற்பத்தியாகிறது. எனவே, குப்பை கூளங்கள், அழுகிய பொருட்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். ஈ மெய்த்த பண்டங்களை உண்ணக்கூடாது. 

4. வயிற்றுப்போக்கும் ஏற்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனைக்கு சென்று இலவசமாக வழங்கப்படும் ஓஆர்எஸ் பக்கெட்டுகளை பெற்று பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

5. வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டிருந்தால் ஆரம்ப நிலையிலேயே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

6. வெளியில் சென்று வந்தவுடன் கைகளை நன்கு கிருமிநாசினி கொண்டு சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்படுகிறது. 

7. மாநகராட்சியால் குளோரின் மருந்து கலந்து விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்த வேண்டும்.

8. ஏற்கனவே உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி இருக்கும் பட்சத்தில் அவற்றை பாதுகாப்பாக கடந்து செல்ல வேண்டும். 

9. மின் கம்பிகள் அறுந்து இருக்கும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவற்றை பரிசோதனை செய்யக்கூடாது. 

10. மழைக்காலங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாதபட்சத்தில் செயற்வெளிச்சம் பெற டார்ச், மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள் தாயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

11. உங்கள் வீடுகளை சுற்றிலும் பழைய சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள், பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், ஆட்டுகல், பூந்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், குளிர்காற்றுப்பெட்டி, உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றில் தேங்கும் தண்ணீரில் தான் டெங்கு நோயை பரப்பும் ஏடீஸ் வகை கொசு உற்பத்தியாகிறது. எனவே, வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை காற்றுப்புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும்.

மேலும், மழை மற்றும் வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு தேவைப்படும் நிவாரப்பணிகள் மற்றும் மிட்புப் பணிகள் சம்பந்தப்பட்ட தகவல் பெறுவதற்கும், பணிகள் சம்பந்தப்பட்ட புகார்கள் தெரிவிப்பதற்கும் மற்றும் தேவையான உதவிகள் பெறுவதற்கும் மாநகராட்சி சார்பாக ஐந்து மண்டலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட பிரத்யேக தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். 

மண்டலம் தொலைபேசி எண்கள்

பிரதான அலுவலகம் - 0422 2302323

மேற்கு - 0422 2551700

வடக்கு - 0422 2243133

தெற்கு - 0422 2252482

கிழக்கு - 0422 2577056

மத்தியம் - 0422 2215618

வாட்ஸ்ஆப் எண் - 8190000200

இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகர பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையர் (கணக்குகள்) ம.சுந்தர்ராஜ், மாநகராட்சி பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...