கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக சுஜித் குமார் பதவியேற்பு


கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக ஐ.பி.எஸ் அதிகாரி சுஜித் குமார் பதவியேற்றுள்ளார்.

இன்று காலை மாநகர ஆணையர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்ட அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-



பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான் கடந்த 2013-ம் ஆண்டு அரசு தேர்வு மூலமாக ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்தேன். மதுரையில் பயிற்சி முடிந்த பின்னர் சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தேன். தற்போது பதவி உயர்வு பெற்று இந்த பொறுப்பினை ஏற்றுள்ளேன்.

கோவை மக்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்கள் என்பதையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கடைபிடிப்பவர்கள் என்று அறிந்தேன்.

அதே நேரத்தில் கோவை மாநகரில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 300 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் தற்போது வரை 200 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளேன். மேலும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்ச்சியை கொண்டு சேர்ப்பேன். அற்பணிப்புணர்வுடன் செயல்பட்டு போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகளை தடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...