டெங்குவிற்கு மேலும் ஒரு குழந்தை பலி - தொடரும் மரணங்கள்..!

கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், பலர் உயிரும் இழந்தனர். இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு குழந்தை டெங்குவால் பலியாகியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது குழந்தை திவ்யஸ்ரீ (3). கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் திவ்யஸ்ரீ அனுமதிக்கப்பட்டார்.

குழந்தையின் ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, தனிவார்டில் வைத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி திவ்யஸ்ரீ இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவையில் டெங்கு பீதி சற்றே ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு ரோட்டா என்ற சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. 6, 10 மற்றும் 14 மாத குழந்தைகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்படும். இதற்காக கோவை மாவட்டத்தில் 420 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இன்று முதல் விநியோகிக்கப்படும் சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக டெங்குவில் இருந்து குழந்தைகளை காக்கலாம்

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...