தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு

ரயில் நிலையத்தில் இருந்து தொலைவில் வசித்து வரும் பொதுமக்களுக்காக அருகிலுள்ள தபால் நிலையங்களிலே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாட்டின் பல்வேறு இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தபால்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொண்டு வருகிறது. இந்த முன்பதிவு மையம் கோவையில் பாப்பநாயக்கன்புதுார் துணை தபால் நிலையத்தில், 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 

இதில், ஓபன் டிக்கெட் தவிர்த்து மூத்த குடிமகன்கள், ஏ.சி., 2-ம் வகுப்பு, சாதாரண முன்பதிவு, தக்கல் உள்ளிட்ட டிக்கெட்கள் தபால் நிலையங்களில் முன்பதிவு செய்து தரப்படுகின்றன. சமீபகாலமாக இவ்வசதியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்ததை அடுத்து, மேலும் ஒரு வருடத்துக்கு தபால் நிலையங்களின் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை தபால் நிலைய அதிகாரி கூறுகையில், கோவையில் இச்சேவை பாப்பநாயக்கன்புதுார் துணை தபால் நிலையத்தில் மட்டும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இச்சேவையை பயன்படுத்துவதற்கு பாப்பநாயக்கன்புதுார் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் இங்கு காலை 9 மணி முதலே வருகை புரிகின்றனர். இதன்மூலம் எளிய முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவை செய்து கொள்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கென ஆன்லைன் வசதி இருப்பினும், பெரும்பாலானோர் ஒரே சமயத்தில் பயன்படுத்தும்போது சர்வர் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. அச்சமயம் தபால்நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது விரைவில் சேவையை அளிக்க முடிகிறது. இவ்வசதியை அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...