தமிழகம் - கேரளா எல்லையில் மாவோயிஸ்ட் கைது


தமிழக கேரள கர்நாடக எல்லையான முச்சந்திப்பில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை பலப்படுத்த மாவோயிஸ்டுகள் சமீப காலமாக முனைப்பு காட்டி வருகின்றனர். இதனை தடுக்க இரு மாநில போலீஸார் தீவிர தடுப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த நவம்பரில் தமிழக கேரளா வனப்பகுதியான கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில், தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையேயான மோதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. 

இந்நிலையில், இன்று (21.09.2017) தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி அடுத்த அகளி வனப்பகுதியில் மவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ் என்பவரை கேரள போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பரமக்குடியை சேர்ந்தவர் என்றும், இவர் கடந்த 2015ல் கேரள வனத்துறை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...