நதிகளை மீட்கும் முயற்சியில் ஈஷாவுடன் கைகோர்த்த குஜராத் அரசாங்கம்

'நதிகளை மீட்போம்' பேரணியின் விழிப்புணர்வு பிரச்சாரம் செப்டம்பர் 20-ம் தேதி குஜராத் சபர்மதி நதி அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜட்கி வாசுதேவ், குஜராத் மாநில முதலமைச்சர் விஜய்ரூபாணி, குஜராத் மாநில கல்வித் துறை அமைச்சர் பூபேந்திரசிங்ம்ஹுபா சுதாசமா, தேசிய விருது பெற்ற விவசாயி கெனபை படேல், நடிகர் மனோஜ்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜட்கி வாசுதேவ் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.



8000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நதிகளை மீட்போம் பிரச்சார நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதலமைச்சர் பேசியதாவது:-

குஜராத் மாநில அரசும் மக்களும் 'நதிகளை மீட்போம்' பேரணியை வரவேற்கிறோம். நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு தங்கள் ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



இதனைத்தொடர்ந்து, ஜட்கி வாசுதேவ் பேசுகையில், நம் தேசத்தில் இப்போது வளர்ந்துவரும் அரசியல் ஒற்றுமை இந்த நதிகளை மீட்போம் இயக்கத்தின் மூலம் வெளிப்படுகிறது. மேலும் நதிகளை மீட்க தங்களது ஆதரவினை வேண்டி 16 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியபோது உடனடியாக பதிலளித்தவர்களிள் குஜராத் முதலமைச்சர் ஒருவர் என்றார்.



தொடர்ந்து, குஜராத்தின் நதிகளை மீட்க குஜராத் அரசாங்கம் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிகொண்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...