தமிழகத்தில் நவோதயா பள்ளி திறக்கக் கோரி கோவையில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும், அரசியல் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நவோதயா பள்ளிகளை திறக்கக் கோரியும், அதனை எதிர்க்கும் அரசியல் கட்சியினரைக் கண்டித்தும் இன்று கோவையில் பாஜக-வினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1986 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நவோதயா பள்ளி தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதற்காக தடையில்லாச் சான்றிதழ் வழங்குமாறும் மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறும் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பட்டின் கீழ் இயங்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறப்பதன் மூலம் இந்தி திணிப்பு நிகழக்கூடும், பாஜக-வின் மதவாதக் கொள்கைகள் சிறு குழந்தைகள் மத்தியில் திணிக்கப்படும். ஏற்கனவே, தனியார் பள்ளிகளால் அரசுப் பள்ளிகள் பாதிப்படைந்துள்ள நிலையில் நவோதயா பள்ளியினால் முற்றிலுமாக அரசுப் பள்ளி முடக்கப்படும் எனக் கூறி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்கக் கோரியும், அப்பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளைக் கண்டித்தும், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நவோதயா பள்ளிகளினால் கல்வித்தரம் உயருமெனவும், ஏழை மாணவர்களும் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வாய்ப்பாக அமையுமெனவும் பாஜகவினர் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...