அகில இந்திய தொழிற்பழகுநர் (தனிநபர் தேர்வு) அறிவிப்பு

மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் (NAC) பெறும் பொருட்டு, அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற்பிரிவில் பயின்று தேசிய தொழிற்சான்றிதழ் (NTC) தொழிற்பிரிவில் தனிநபராக அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று (ITI) தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சியினை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம்பெற்ற தொழிற் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்கள் மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற விரும்பினால் தனி விண்ணப்பதாரராக மத்திய அரசால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ளலாம். 

தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:

  • 07.11.2017 - கோட்பாட்டுத் தேர்வு (theory) (காலை: 9.30 மணிக்கு), வேலைவாய்ப்பு திறன் தேர்வு (மதியம் : 02.30 மணிக்கு).
  • 08.11.2017 - தொழிற்சாலை கணக்கீடு மற்றும் அறிவியல் தேர்வு (காலை: 9.30 மணிக்கு), பொறியியல் வரைதல்(மதியம் : 02.30 மணிக்கு).
  • 09,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செய்முறைத் தேர்வு நடக்கிறது (காலை: 9.30 மணிக்கு).


கோவை, அம்பத்தூர், கிண்டி, வடசென்னை, வேலூர், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், சேலம், ஒசூர், தாராபுரம், மேட்டூர் அணை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் / அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மைய உதவி இயக்குநர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு பிற விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். 

தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate -NAC) வழங்கப்படும். 

தேர்வுக்கான விண்ணப்பம் அந்தந்த அரசு தொடர் அறிவுரை மையங்களில் உள்ள உதவி இயக்குநர்களை அணுகி பெற்று இதனை தட்டச் செய்து விபரங்களை பூர்த்தி செய்து, மேற்கூறப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர் அறிவுரை மையங்களில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழியாக மட்டுமே சமர்பிக்க வேண்டும். 

தேர்வு கட்டணம் ரூ.200-ஐ 0230-LABOUR AND EMPLOYMENT -800- OTHER RECEIPTS, AC - CRAFTSMEN TRAINING SCHEME 05 - APPRENTICES ACT, DPC NO.0230-00800-AC-0508 என்ற கணக்குத் தலைப்பில் சார்பு கருவூலம்/மாவட்ட கருவூலங்களில் செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தலாம். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...