தசைதிசைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடல், பாடல் நிகழ்ச்சி


கோவை, ஜென்னீஸ் கிளப்பில் உலக தசைதிசைவு நோய் விழிப்புணர்வு தின விழா எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் நிறுவனர் டாக்டர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்ம விழாவில், சிறப்பு விருந்தினராக கே.ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். 



இதில் 40-க்கும் மேற்பட்ட தசைதிசைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பங்கேற்று குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனைத்தொடர்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினர் டாக்டர் பக்தவச்சலம் நினைவு பரிசு வழங்கினார்.



பின்னர், நிகழ்ச்சியில் டாக்டர் பக்தவச்சலம் பேசுகையில், எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் நிறுவனர் லட்சுமி கோவையில் ஒரு மகத்தான சேவையை செய்து வருகிறார். இவரை கடவுளின் தூதர் என்று கூறலாம். இங்கு தசைதிசைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி பெறுவார்கள். இதனை பார்க்கும் போது பெற்றோர்களின் கவலையும் குறையும் என்றார். 



மேலும், இதுபோன்ற உன்னதமான சேவையை கோவையில் செய்துவரும் எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...