வடமாநில தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வடமாநில தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், அதிக சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் கூறியதாவது:-

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 20ம் தேதி அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வடமாநில இளைஞர்கள் சிலரை விற்பனை செய்ததை தடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர். இதுபோக பல வெளிமாநில இளைஞர்கள் கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளனர். 

எனவே, காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கான பணிபாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...