ஒழுங்கீனமாக நடக்கும் கிரிக்கெட் வீரர்கள் இனி அவுட் - ஐ.சி.சி.யின் புதிய விதிமுறைகள் 28-ம் தேதி முதல் அமல்


கிரிக்கெட் போட்டிகளில் தொழில்நுட்பம் ரீதியாக புதிது புதிதான விதிமுறைகளை ஐசிசி அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மைதானத்தில் வீரர்களின் செயல்பாடுகளுக்கு கடிவாளம் போடும் வகையில் புதிய விதிமுறைகளை வரும் 28ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசியின் புதிய விதிப்படி வீரர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டால் நடுவர்களால் வெளியேற்றப்படுவார்கள். கால்பந்து போட்டியில் வீரர்கள் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே விதிமுறைதான், ஆனால், ரெட் கார்டுக்கு பதில் 2 சிக்னல்கள் நடுவர்களிடம் இருந்து வரும்.

அதேபோன்று இனி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் முதல் 80 ஓவரில் 1 முறை மட்டுமே டிஆர்எஸ் முறை பயன்படுத்த முடியும். இதற்கு முன் இரண்டு முறை பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தது. வீரர்களின் பேட்டின் விளிம்புகள் 40 மில்லி மீட்டர் அளவிற்கு மேல் இருக்கக்கூடாது.  20 ஓவர் போட்டிகளில் நடுவரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, ரன் அவுட், கேட்ச் ஆகியவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதிமுறை வரும் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தாலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான தொடரில் இந்த விதிமுறைகள் இருக்காது.  இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் போட்டிகளே பழைய விதிமுறைகளுடன் நடைபெறும் கடைசி போட்டிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...