பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கைது

பசும் பால் லிட்டருக்கு ரூ.35 வழங்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தொடர்ந்து, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

விவசாயிகளின் விலை பொருளுக்கு உரிய விலை வழங்குதல், பசும் பால் விலையை 35 ரூபாய்க்கும், எருமை பால் விலை 45 ரூபாய்க்கும் வாங்குதல், கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.4000ம் வழங்குதல் மற்றும் மோடி தேர்தல் காலகட்டத்தில் அறிவித்தபடி அனைத்து விவசாய பொருளுக்கும் கூடுதல் விலை வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறோம்.



எங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாநில குழு வழிகாட்டுதலின் படி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார். 

தொடர்ந்து, முற்றுகை போராட்டம் நடத்திய 42 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...