சிங்காநல்லூரில் பழுதடைந்துள்ள ஹவுசிங்யூனிட் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்

சிங்காநல்லூர் தொகுதிகுட்பட்ட 64 வது வட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள பழுதடைந்துள்ள ஹவுசிங்யூனிட் வீடுகளைப் கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு அந்த வீடுகளில் வசித்துவரும் பொதுமக்களை நேரில் சந்தித்தார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்அஞ்சல் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் தகவல் தெரிவித்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் இங்கு உள்ளது. இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வீடுகளில் மக்கள் யாரும் குடியிருக்க முடியாத, வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு வசிக்கும் பொதுமக்களிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.



கோவை சிங்காநல்லூர் ஹவுசிங்யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிமக்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வட்டாட்சியர், ஆர்.டி.ஓ துணைவட்டாட்சியர் ஆகியோர் போலீஸ்துணையுடன் நோட்டீஸ் கொடுத்தனர். கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு, அதே இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை பாதுகாப்பான மாற்று இடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...