மாநகராட்சி சார்பில் இஸ்கான் கோவிலில் "தூய்மையே சேவை" பணி தீவிரம்

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற இயக்கம்  கடந்த 15-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கமானது 15-ம் தேதி முதல் காந்தியின் பிறந்த நாளான 02.10.2017 வரையில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி சார்பில் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை பணி தொடங்கியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக இன்று (29.09.2017) காலை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 36வது வார்டு பகுதியான கொடிசியா மைதானத்தின் அருகில் உள்ள கோவை இஸ்கான் கோவில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கோவிலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



தூய்மை பாரத இயக்கத்தின் நோக்கமானது, தூய்மை பாரத இயக்கம் சார்ந்தப் பணிகளை அனைத்து நிலைகளிலும் ஒவ்வொரு இந்திய பிரஜையும், இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து பொது மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர்கள் மூலம் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.



வீடுகள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் துப்புறவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்பினரால் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழச்சியில், கோவை மாவட்ட கிழக்கு மண்டல உதவி ஆணையர் ராம்குமார், கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...