கோவையில் நடைபெற்ற வோடஃபோன் மாரத்தான் 2017 போட்டியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


கோயம்புத்தூர் ரன்னர்ஸ், ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர் தடகள சங்கம், ஆகியவற்றுடன் வோடாபோன் இணைந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக வோடாபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் 21.1 கிமீ ஓட்டம், 10 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ ஓட்டம் மற்றும் நடை என்ற மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். இதில் மொத்தம் 2.5 லட்சம் என்ற தொகைக்கும் அதிகமான ரொக்கப் பரிசுத் தொகையானது, வழங்கப்படுகின்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



அதன்படி, முதலாம் போட்டியான 21.1 கி.மீ (அரை மாரத்தான்) பந்தயத்தை காலை 5.00 மணிக்கு கோயம்புத்தூர் கேன்சர் பவுன்டேஷன், நிர்வாக அறங்காவலர் டாக்டர்.டி.பாலாஜி கொடியசைத்து துவக்கிவைத்தார்.



இதில் 2000 நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் வெல்லிங்டனை சேர்ந்த ஆர். பத்மநாபன், 01.10.33 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பெற்றார். இரண்டாமிடத்தை ஜி.என். வினோத் 01.11.06 நிமிடங்களில் வந்தாடைந்தார். மூன்றாமிடத்தை டி. நிகில் 01.12.02 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார்.



பெண்கள் பிரிவில் வசந்தா மணி 01.29.45 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். கே. சுகுணா 01.30.39 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். வி.சோனியா 01.36.00 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். மூத்தோர் ஆண்கள் பிரிவில் முகமது இட்ரிஸ் 01.24.01 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். போஸ்கோ 01.32.54 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். நஞ்சுன்டன் 01.34.36 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் மீனாட்சி சங்கர் 02.05.35 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். ஊர்மிளா சுரானா 02.11.31 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். தொடர்ந்து ரக்ஷனா பட்டேல் 02.24.04 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.



இரண்டாம் போட்டியான 10 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 6.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் தமிழ்நாடு துணைத் தலைவர் (மார்க்கெட்டிங்), மணிஷ் சிங்கால் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 4,700 பேர் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் பி.கிரண் 00.31.52 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், எம். ராஜ்குமார் 00.32.00 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், சுரேஷ்குமார் 00.32.33 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.

பெண்கள் பிரிவில் பானுப்பிரியா 00.44.48 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், திவ்ய லட்சுமி 00.45.51 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், எஸ்.கிருத்திகா 00.46.59 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். மூத்தோர் ஆண்கள் பிரிவில் டி.எம்.நாராயணன் 00.43.43 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், பி. பாண்டுரங்கன் 00.43.54 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், ஜெயகுமார் 00.44.29 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் ஆர்.லட்சுமி 00.49.28 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், கே.ஆர்.தீபா 01.08.50 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், கீதா பாலு 01.09.21 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.



மூன்றாம் போட்டியான 5 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 7.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் கோயம்புத்தூர், மண்டல தலைவர், நவீன் சந்தரன் நாயர்   கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 7,100 பேர் கலந்து கொண்டு ஓடினார்கள்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...