காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கலைகட்டும் டாஸ்மாக் கடைகள்..!


கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினமான இன்று மூட உத்தரவிடப்பட்டது.

விதிமுறைகளுக்கு முரணாக இன்று மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரித்திருந்தார். ஆனால், கோவையின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் இன்று வெளிப்படையாகவே மது விற்பனை நடப்பதை பார்க்க முடிகிறது.



மேட்டுப்பாளையம் சாலையின் அருகில் அமைந்துள்ள சங்கனூர் சாலை, கண்ணப்பன் நகரில் நான்கு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இந்த கடைகள் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. குறிப்பாக சாதாரண நாட்களில் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இன்று காந்தி ஜெயந்தி தினத்தின் சிறப்பு விற்பனையாக காலை 9 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை நடந்துவருவதாக அங்குள்ள பொதுமக்கள் புகாரளித்தனர்.

மேலும், இவர்களை தண்டிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், காலையிலேயே வந்து மாமூல் வாங்கிவிட்டு, மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

விசாரித்ததில், அரசு நிர்ணய விலையை விட அதிக விலையில் இன்று மது பாட்டில்கள் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

அரசு உத்தரவை மதிக்காத டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீதும், அவர்களுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் படி சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...