சேலத்தில் "ஸ்வச்ச ஹி சேவா" தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிய தென்னிந்திய ரயில்வே


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்வச்சபாரத் தூய்மை இந்தியா நடவடிக்கைகளில் தற்போது நடைபெரும் 'ஸ்வச்ச ஹி சேவா' தூய்மையே சேவை நிகழ்வுகளின் நிறைவாக நேற்று (02.10.2017) காந்தி ஜெயந்தி தினத்தன்று தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் நடைபெற்றது.



தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்ட விழா செப்.15-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தெற்கு ரயில்வேத்துறையினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஈரோடு அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர வங்கிகள், காவிரியோர ரயில்நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. 



இதனிடையே, காவரி ஆற்றுப்படுகையில் தூய்மைப் பணியை சேலம் ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தொடங்கி வைத்தார். இதில், சேலம் ரயில்வே ஊழியர்கள்,  கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 600-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இதனை ஈரோடு மாவட்ட எம்.பி. எஸ். செல்வக்குமார சின்னையன் ஆய்வு செய்து, தூய்மைப்படுத்தும் பணிகுறித்து சேலம் ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மாவிடம் கேட்டறிந்தார். 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...