கேஜிஐஎஸ்எல் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்


கோவை மாவட்டம் சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரியில் வரும் அக்டோபர் 14ம் தேதியன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், கோவை, சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரி ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்டோபர் 14 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை, சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரியல் நடைபெற உள்ளது.

இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, ஓட்டுநர், டெய்லர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு வரை பயின்ற ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விசான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். 

வயது வரம்பு இல்லை. இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.

இதில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக  பதிவு, புதுப்பித்தல், திறன் பயிற்சிக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மாணவ, மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...