எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம் சார்பில் விற்பனையாளர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம், கோவை மற்றும் குன்னூர் பேஸ்டர் இன்ஸ்டிடியூட், அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை இணைந்து ஒரு நாள் விற்பனையாளர் அபிவிருத்தி நிகழ்ச்சி வரும் அக்டோபர் 11ம் தேதியன்று குன்னூர் பேஸ்டர் இன்ஸ்டிடியூட்-யில் நடைபெறவுள்ளது.

சிறு, குறு தொழில் முனைவோர்க்கான இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பொது கொள்முதல் கொள்கை-2012 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இக்கொள்கையின் மூலம் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தங்களது ஆண்டு மொத்த கொள்முதலில் 20 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அந்நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதன் உள் ஒதுக்கீடு, அதாவது 20 விழுக்காட்டில் 4 விழுக்காடானது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அவை வழங்கும் சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் குன்னூர் பேஸ்டர் நிறுவனம் மற்றும் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை ஆகியவற்றிற்கான புதிய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களை அடையாளம் காணும் வகையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எஸ், எஸ்டி தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Newsletter

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...