சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவருக்கான கோரிக்கை சிறப்பு முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவரின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட 3-ம் பாலினத்தவர்கள் கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப்பிடம் மனுக்களை கொடுத்தனர்.



இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப் பேசுகையில், காரமடை பகுதியில் 3-ம் பாலினத்தவர்கள் 24 பேருக்கும், சின்னவேடம்பட்டி பகுதியில் 10 பேருக்கும் குடியிருக்க இடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள் தற்போது குடியிருந்து வருகின்றனர். இதேபோல, போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இடம் வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.



3-ம் பாலினத்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது கோரிக்கைகளை விரைவில் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...