ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் எழுதிய புத்தகம் இந்திய துணை குடியரசுத் தலைவரால் வெளியீடு

ஜெம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் சி.பழனிவேலு மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் பி.பிரவீன்ராஜ் ஆகியோர் எழுதிய புத்தகத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

கோவை ஜெம் மருத்துவமனையின் நிறுவனரான மருத்துவர் சி.பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை துறையில் உலகளவில் முன்னோடியாக திகழ்வதோடு மட்டுமல்லாது இத்துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து உலகளவில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 



இவரது கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமாக கருதப்படுவது நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சையாகும். இவர் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பல புத்தகங்கள் உலகில் பல மொழிகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே தற்போது அண்மையில் எழுதப்பட்ட நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சை புத்தகத்தில் அறுவை சிகிச்சை முறையை படிப்படியாக தெளிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகமானது உலகளவில் உள்ள இளைய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் மற்றும் மூத்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பி.பிரவீன்ராஜ் உடல் பருமன் அறுவை சிகிச்சையை முறைப்படுத்த பல உடல்பருமன் தொடர்பான மருத்துவ மாநாடுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். தற்போது, உடல் பருமன் அறுவை சிகிச்சை வழிகாட்டு புத்தகத்தை எழுதியுள்ளார்.



இந்த புத்தகங்கள் வெளியீட்டு விழா இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் ஏஎஸ்ஐ தலைவர் மருத்துவர் திலீப் கோடே ஆகியோர் தலைமையில் தில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில் நடைபெற்றது. இதில் புத்தகங்களை வெளியிட்ட வெங்கையா நாயுடு மருத்துவர்களை பாராட்டினார்.

Newsletter

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...