ஆட்சியை தக்கவைக்க துடிக்கும் அதிமுக அரசு மக்கள் நலனை பாதுகாக்க தவறிவிட்டது - கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி



கோவை அரசு மருத்துவமனையில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு பிஸ்கட், ரொட்டி, பழம் போன்ற உணவு வகைகளை கொடுத்த பிரேமலதா விஜயகாந்த் மருத்துவர்களிடம் டெங்கு பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

"தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதில் கோவை மாவட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. 

குறிப்பாக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள். பல விதமான காய்ச்சல் காரணமாக இந்த மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் டெங்குவால் பாதிக்கப்பட்டோரே அதிகம்.

இவை அனைத்திற்கும் காரணம் தமிழகத்தில் சுத்தமில்லாததே ஆகும். அதிமுக அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதில் செலுத்தும் கவனத்தை பொது மக்கள் மீதும் செலுத்தியிருக்க வேண்டும்.

டெங்குவால் கோவையில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அரசு சார்பில் புள்ளி விபரங்கள் தவறாக கொடுக்கப்படுகின்றது என்று அவர் குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதி இல்லாதது இந்த அவல நிலைக்கு ஒரு முக்கிய காரணம். குறிப்பாக சுகாதாரத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை இதுவரை மருத்துவ காப்பீட்டில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசும் டெங்கு விவகாரத்தில் தமிழக அரசிற்கு உதவி செய்ய வேண்டும்.

மழை, வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் பாதிக்கப்பட்டோரை காப்பதில் முதலில் களத்தில் இறங்குவது தேமுதிக. தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை இன்று பார்வையிட்டு வருகின்றனர். திருப்பூர், கோவையை போல திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவு டெங்கு பாதிப்பு இருப்பதால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு சென்றுள்ளார். 

டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளின் போது பிரச்சனையை அரசியல் ஆக்காமல் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே டெங்கு ஒழிப்பு சாத்தியம் என ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

நொய்யல் ஆற்றில் குளிப்பதனால் தான் நுரை வருகிறது என அமைச்சர் கருப்பண்ணன் சொல்வது வேடிக்கையாக உள்ளது. தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். 

அதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றது நீட்டுக்காக இல்லை. தன் மீது வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது தான் காரணம். இந்த ஆட்சியே ஒரு மர்மமான ஆட்சியாக உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மர்மம் விலகினால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும். இந்த ஆட்சி வெகு விரைவில் கலைக்கப்படும். நல்ல தீர்ப்பு 4 ம் தேதி வரும்.

மேலும், நடிகர்கள் யார் கட்சி துவங்கி அரசியலுக்கு வந்தாலும் சமாளிக்கும் திறமை தேமுதிகவிற்கு இருக்கின்றது."

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.



முன்னதாக, தேமுதிக-வினர் கோவை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...