கோவை மாநகராட்சி சார்பில் இன்று "ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்" கடைபிடிப்பு

தமிழக அரசின் உத்தரவின்படி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் “ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்” கடைபிடித்து, அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பூங்காக்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று (12.10.2017) கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு அலுவலக வளாகங்கள், வட்டாட்சியர் அலுவலக (தெற்கு) வளாகங்கள், கிராம நிர்வாக அலுவலக வளாகங்கள் உட்பட மொத்தம் 14 அரசு அலுவலகங்கள், 3 நகர் நல மையங்கள், 64 பள்ளிகள் மற்றும் 8 தனியார் வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வின் போது, அரசு மற்றும் தனியார் வளாகங்களில் தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவை முறையாக மூடி வைக்கப்பட்டுள்ளதா எனவும், மழைநீர் தேங்கி உள்ளனவா எனவும், சமையல் அறையில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் முறையாக மூடி வைக்கப்பட்டுள்ளனவா எனவும், பள்ளி வளாகங்களில் தேவையற்ற பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் கப்புகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.



தொடர்ந்து, உபயோகமற்ற பொருட்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் கப்புகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இன்று நடைபெற்ற கொசு ஒழிப்பு பணிகளின் போது குறிப்பாக வார்டு எண்.23 ஆர்.எஸ்.புரம் பாரதி வித்யா பவன் பள்ளி, வார்டு எண்.72 ஓய்.டபுள்யூ.சி.ஏ பள்ளி, வார்டு எண்.17 கல்வீராம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பி.எஸ்.ஜி.சர்வஜனா பள்ளி மற்றும் செல்வபுரம் பாலவிகாஸ் ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு, டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மேலும், கோவை மாநராட்சி சார்பாக ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் “ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்” கடைபிடிக்கப்படும் எனவும், பொதுமக்கள் அனைவரும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு  முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...