தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கோரி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தொழிலாளர்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு எஸ்டேட் தொழிலாளர்கள் 20 சதவிகித தீபாவளி போனஸ் வேண்டியும், நிர்வாகம் வழங்கிய 9.5 சதவிகித போனஸிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதேசமயம், வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு நாளை தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டது. 

மேலும், இருபது சதவிகித போனஸ் வழங்க வேண்டுமெனவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் குடும்பத்துடன் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...