மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (அக்.,13) நடந்தது. 

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், உத்தரவின்பேரில், துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் மண்டலம் மற்றும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்படுகின்ற டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உதவி ஆணையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களிடம் கேட்டறிந்தார். 

அப்போது, டெங்கு தடுப்பு குழுவினர் வழக்கமாக வீடுவீடாக சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், அதிகமாக காய்ச்சல்  உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார். 

டெங்கு தடுப்பு குழுவினர் பணிகள் மேற்கொள்ளும் போது  டெங்கு கொசுபுழுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தொடர்ந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். சுகாதார ஆய்வாளர்கள் தங்கள் வார்டுகளுக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு வளாகங்கள், தனியார் வளாகங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொண்டு தேவையான இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடர்ந்து பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

முக்கியமாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகளின் போது கொசு உற்பத்தியாகும் இடங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார பிரிவு ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...