பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரப்பியவர் கைது

கோவையை சேர்ந்த பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேந்தவர் சுப்ரமணியம். இவரது மகன் ரங்கநாதன் (36). இவருக்கு கோவையை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் வாட்சாப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பார்க்காமலே காதலித்து வந்தனர். தொடர்ந்து, பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரங்கநாதன் பெற்றுள்ளார்.

இந்த சூழலில் ரங்கநாதனுக்கு முன்னதாகவே திருமணம் நடந்து விவாகரத்தானவர் என்பதும் தெரியவரவே சம்மந்தப்பட்ட பெண் ரங்கநாதனுடன் பேசுவதை தவிர்த்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ரங்கநாதன் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாட்சாப் மூலம் பலருக்கு அனுப்பியுள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-இடம் புகார் அளித்தார்.

புகரின் பேரில் வழக்குப்பதிவு சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் மல்லிகா இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

அப்போது ரங்கநாதனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும், தற்போது பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரவவிட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, ரங்கநாதன் மீது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுதல், பெண்ணின் கன்னியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ரங்கநாதனை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்ட்-ஐ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...

Special Weekly Trains Announced Between Sambalpur and Podanur

To cater to the increasing travel demand, Southern Railway will operate weekly special trains between Sambalpur in Odish...

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...