சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

கோவை மாகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் சார்பில் வாரந்தோறும் ஆய்வு செய்து மீட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்.,14) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32, விளாங்குறிச்சி, ஸ்ரீ தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள 35 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.16, வடவள்ளி, பவன் பூங்கா, பார்க் சைட் 1 மற்றும் 2 (புதிய தில்லை நகர் விரிவாக்கம்) பகுதியில் உள்ள 17.65 சென்ட் பரப்பும், வார்டு எண்.19, வீரகேரளம் ராஜூ நாயுடு லேஅவுட் பகுதியில் உள்ள 10.67 சென்ட் பரப்பும், அதே பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10.71 சென்ட் பரப்பளவிற்கான இடத்திற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.28, சரவணம்பட்டி, ஸ்ரீ சக்தி கார்டன் ( பகுதி 2) பகுதியில் உள்ள 18 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி, வார்டு எண்.98 இளங்கோவன் நகர் ( பார்க் சைட்1 மற்றும் 2 ) பகுதியில் உள்ள 25 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 106.32 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்யபட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து கோவை மாநகராட்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மீட்க்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் மாநகர நகரமைப்பு பிரிவின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...