டெங்குவை ஒழிக்க தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் சுகாதாரம் பேணிகாத்திட கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

கோவை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் தங்கள் சுற்றுப்புரத்தில் சுகாதாரம் பேணிகாத்திட மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுரை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.,14) டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது, கோவை மாவட்டத்தில் காய்ச்சல்கள் மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் கட்டுப்படுத்திடவும், முற்றிலுமாக தடுத்திடவும், எண்ணற்ற தொடர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல்கள் அல்ல, டெங்கு காய்ச்சல் என்பது ஒருவகையான வைரஸ் காய்ச்சலே ஆகும். நல்ல தண்ணீரில் உற்பத்தியாகி பகல் பொழுதில் கடிக்கும் ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எனவே கல்லூரிகள், மருத்துவமனைகள் தங்கள் சுற்றுப்புறத்திலுள்ள தேவயைற்ற பழைய பொருட்களில் தண்ணீர் அல்லது மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை கொசுக்கள் புகாமல் நன்கு மூடி வைக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மொட்டை மாடியில் போடப்பட்டுள்ள பயன்படுத்தாத தண்ணீர் தேங்கும் வகையிலான பொருட்கள் போன்றவற்றினை முறையாக அப்புறப்படுத்திட வேண்டும். மேலும், காய்ச்சலுடன் வரும் நோயாளிகளிடம் உரிய பரிசோதனைகளின் அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கென பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட வேண்டும். இரத்த அணுக்களின் அளவீடுகளை ஒரு நாளைக்கு மூன்றுமுறை பரிசோதனை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இரத்த தட்டணுக்களின் இருப்பு போதிய அளவில் உள்ளது.

அதுபோலவே, கல்லூரிகளில் மற்றும் கல்லூரி விடுதிகளை சுத்தமாகவும், டெங்கு காரணிகள் இல்லாத பகுதிகளாகவும் மாற்ற வேண்டியது கல்லூரி நிர்வாகத்தின் கடமையாகும். சுற்றுப்புறப்பகுதிகளை தூய்மைபடுத்தி ஏடிஸ் கொசு உற்பத்தியாகாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் டெங்கு தடுப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவ மாணவியர்கள் வாயிலாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடியிருப்பு பகுதியிலுள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் 5 தினங்கள் நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். 

விடுதிகளில் 2 நாட்களுக்கு மேல் காய்ச்சலுடன் இருக்கும் மாணவ மாணவியர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும்.

கோவை மாவட்ட நிர்வாகமும், டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக தூய்மை காவலர்கள், மஸ்தூர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளுதல், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்குதல், இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊரக பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், தேவைப்படும் இடங்களில் கூடுதாலன மருத்துவர்களைக் கொண்டு மருத்துவமுகாம்கள் மேற்கொள்ளுதல், திரையரங்குகள், உள்ளுர் தொலைக்காட்சிகளில் குறும்படங்கள் மூலம் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இச்சிறப்பு முயற்சிக்கு தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், பொதுமக்கள் என அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக் கொண்டார். 

இவ்வாய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .துரை.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் .சந்திரசேகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாநகர சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்திவேல் ஆகியோர் உட்பட தனியார் கல்லூரி, மருத்துவமனை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...