பொய்வழக்கு தொடர்ந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரி மனு

தனது பணத்தை அபகரித்துக் கொண்டு, தனது மீது பொய் வழக்கு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபாதை வியாபாரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் நடைபாதை பழவியாபாரம் செய்து வருபவர் காந்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி 100 அடி சாலையில் பகலில் கம்பங்கூழ் கடையும், மாலையில் இட்லி வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஸ்வரியின் இட்லி கடைக்கு சென்ற சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆய்வாளர் ஜெயராஜ், காவலர் கணேசன், எந்த அனுமதியுமின்றி கடை வைத்ததாகக் கூறி காந்தியை இரவு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அனுமதியின்றி கடை வைத்ததால், 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் தாயை வரவழைத்து அபராதத் தொகையான ரூ.1,200 செலுத்திவிட்டு, வியாபாரி காந்தி காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தனது பணத்தை அபகரித்தது மட்டுல்லாமல் பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர்கள் மோகன், பாலகன், ஜெயராஜ் மற்றும் கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும், அபகரித்த பணத்தை திரும்பப்பெறக் கோரியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...