ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிக்கை வெளியீடு

மத்திய நிதியாணைய நிதி ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் மத்திய நிதியாணைய நிதி ஒதுக்கீடு குறித்து வெளியிட்ட அறிக்கையில், மக்களின் அத்தியாவசிய தேவைக்கான மின் கட்டணத்தையும், குடிநீர் கட்டணத்தையும் செலுத்தாமல் மத்திய நிதியாணையம் அளித்துள்ள அடிப்படை மானியத் தொகையை கான்டிராக்டுகள் மற்றும் டெண்டர்களுக்கு முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது என்று காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அரசாணை எண்.108, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுலை 24-ம் தேதியில், 2015-16 முதல் 2019-20 வரையிலான ஆண்டுகளுக்கு மத்திய நிதியாணையத்தின் நிதி ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் அடிப்படையில், 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுகளுக்கு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு அடிப்படை மானியமாகவும், செயல்திறன் மானியமாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. 

நடப்பாண்டில், (2017-18) 14-வது மத்திய நிதிக்குழு மானிய பரிந்துரையின் அடிப்படையில், முதல் தவணைத் தொகையாக மாநகராட்சிகளுக்கு ரூ, 252.79 கோடியும், நகராட்சிகளுக்கு ரூ.195.91 கோடியும் மாநில அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கான நகர்ப்புர உள்ளாட்சியின் பங்குத் தொகையாகவும் மற்றும் குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டணத்தை செலுத்தவும் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொகையில் 2017-18ஆம் ஆண்டில் தமிழ்நாடு நகர்ப்புரச் சாலைகள் உட்கட்டமைப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில், தோராயமாக 18 சதவீதம் அளவில் 14வது மத்திய நிதிக்குழு மானியத் தொகையிலிருந்து எடுத்து, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பங்காக சாலைப் பணிகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜெயலலிதாவின் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டே பகிர்ந்தளிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தபோது, அப்போது நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு, அவசரகதியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சிறப்புச் சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ள, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரித்தான மற்றும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய முத்திரைத்தாள் மீதான மிகு வரித் தொகையில், 50 சதவீத தொகையை தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதி என வகைப்படுத்தி, அத்தொகையை உள்ளாட்சி அமைப்புகள் சாலை அமைப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவதற்காக 28.02.2011 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

திமுக ஆட்சி காலத்தில், செயல்படுத்தப்படாமல், வெறும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டு நின்றுபோன 8 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜெயலலிதாவால், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் விருதுநகர், சேலம், வேலூர், மதுரை, சிவகங்கை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 6 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் 2,936 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

இதைத் தவிர, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, வேலூர் ஆகிய 5 மாநகராட்சிகள் மற்றும் ஆம்பூர், ஒசூர், இராஜபாளையம், மற்றும் நாகர்கோவில் ஆகிய 4 நகராட்சிகளில், 2,244 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர்த் திட்டப்பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் மேம்பாடு மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளால் பாதிப்படைந்த சாலைகளை சீரமைக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 5 ஆண்டுகளில் வெறும் ரூ.15,964 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் குடிநீர் திட்டம், சாலைகள், மழைநீர் வடிகால், தெருவிளக்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு 47,571 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

2-ஜி அலைக்கற்றை ஊழலின் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தலைக்குனிவு ஏற்படுத்தியவர்கள் திமுகவினர். சர்க்காரியா ஊழல் போல விஞ்ஞான ரீதியில் ஊழல்கள் புரிவதில் வல்லவர்கள் திமுகவினர். இந்திய வரலாற்றில் ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். எனவே ஸ்டாலினுக்கு ஊழல் பற்றி பேச எவ்வித அருகதையும் கிடையாது. ஊழலில் ஊறிப்போன திமுகவினருக்கு வேண்டுமானால். அரசு நிதியை முறையற்ற முறையில் எப்படி செலவிடுவது எனத் தெரிந்திருக்கலாம்.

அதிமுக ஆட்சியில் தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக சாலைப் பணியினை ஆரம்பிக்கும் முதல் முடியும் வரை கண்காணிக்க திட்ட மேலாண்மை கலந்தாளுநர் நியமனம் செய்யப்பட்டு, சாலையின் தரம் தரக்கட்டுப்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ள மாநில தரக் கட்டுப்பாட்டு அலுவலர் (ளுவயவந ணுரயடவைல ஆடிnவைடிச) உள்ளிட்ட ஐந்து அடுக்குகளாக பரிசோதிக்கப்பட்டு, சாலைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு நவீன உத்திகளை பயன்படுத்தி சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகத் தரத்துடன் அமைக்கப்பட்ட 194 பேருந்து சாலைகளும் மற்றும் அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அனைத்து பேருந்து சாலைகளும் சென்னை மாநகரில் 100 ஆண்டுகளில் பெய்யாத அளவிற்கு டிசம்பர் 2015 ஆம் ஆண்டு பெய்த மழையிலும், மற்றும் பெருவெள்ளத்திலும் எந்த சேதமும் அடையாமல் இருந்தது. மேலும், அதற்கு அடுத்து வந்த வர்தா புயலின்போதும் மற்றும் மிகக் கடுமையான வெப்ப நிலையிலும் எந்த சேதமும் இல்லாமல் உள்ளது. இதுவே, ஜெயலலிதாவின் ஆட்சியில் சாலைகள் மிகவும் தரத்துடன் அமைக்கப்பட்டதற்கு சான்றாகும்.

எனவே மத்திய நிதிக்குழு மானியத் தொகை விடுவிப்பிலும், திட்டப் பணிகளை செயல்படுத்துவதிலும் முறைகேடுகளோ, விதி மீறல்களோ, அரசியல் குறுக்கீடோ எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்து, அபத்தமான அறிக்கை வெளியிட்டு அவதுhறுகளைப் பரப்பிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தின் போதும், 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலின் போதும், மற்றும் 142 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியிலும், அதிமுக அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் துயரை அறவே துடைத்தது என்பதை நாடே அறியும்.

ஜெயலலிதாவின் வழியில் அனைவரும் பாராட்டும் வகையில் மக்கள் நலப்பணிகளை சிறப்பாக ஆற்றிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான ஆட்சியை பொய்யான புகார்களைக் கூறியும், குறுக்கு வழியில் செயல்பட்டும், அவப்பேறு உண்டாக்கி, முதலமைச்சராக வேண்டும் என பகல் கனவு கண்டு வரும் ஸ்டாலினின் கனவு என்றுமே பலிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...