வாலிபரை கொலை செய்த கும்பலை 8 மணி நேரத்தில் கைது செய்த துடியலூர் போலீஸார்


கோவையில் வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை துடியலூர் போலீஸார் 8 மணி நேரத்தில் கைது செய்தனர். 

ரத்தினபுரி, தில்லைநகரைச் சேர்ந்த சீனிவாசன் (20) என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இவர், நேற்றிரவு 10 மணியளவில் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில், கொலை நடந்த 8 மணி நேரத்தில், குற்றவாளிகளான ஜீனத்குமார் (30), சூர்யபிரகாஷ் (27), செந்தில்குமார் (30) ஆகிய 3 பேரை ரத்தினப்புரி பகுதியில் உள்ள நாராயணசாமி லே அவுட்டில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்தக் கைது நடவடிக்கை குறித்து போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சீனிவாசன் மற்றும் கொலையாளிகள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான விக்கி என்பவர் ஜீனத்குமாருடன் சண்டையிட்டு மாயமாகியுள்ளார். இதனால், விக்கி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துக் கூறுமாறு சீனிவாசனிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

 பின்னர், ஜீனத்குமார், சூர்யபிரகாஷ் , செந்தில்குமார் ஆகியோருடன் சீனிவாசன், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள விக்கியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு விக்கி, வீட்டில் இருக்கிறாரா..? எனப் பார்த்து வருமாறு சீனிவாசனிடம் மூவரும் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், கத்தி மற்றும் கற்களை கொண்டு தாக்கி சீனிவாசனை கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...