கோவையில் டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை - அமைச்சரின் பேச்சால் குழப்பம்



டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறுகளை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார். 

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழக அரசு வேகமாக செயல்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், டெங்கு பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதுவரை கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பே ஏற்படவில்லை. உயிரிழப்புகள் இல்லாததால் கோவையில் ஆய்வு செய்ய மத்திய குழு வரவில்லை. தண்ணீரை மாற்றி குடித்தால் காய்ச்சல் வருகிறது. டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த இரு மாதங்களில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...