கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அக்.25 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்



கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வரும் அக்டோபர் 25ம் தேதியன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பனூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்சின்னம்பாளையம், காளியாபுரம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனப்பட்டி, கப்பளாங்கரை, பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கிலிபாளையம், மூலனூர், கிட்டசூரம்பாளையம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மாளபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அக்டோபர் 16 முதல் 25ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி, சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் அக்டோபர் 25ம் தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...