டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (22.10.2017) தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் துப்புரவு சுகாதாரப்பணிகள் தொடர்பான திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்றும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பார்வையிட்டு ஏடிஸ் கொசுப்புழு வளருவதற்கான சூழலை அழிக்கும் பணியினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்து, குடிநீரில் தவறாமல் குளோரின் குறித்த விகிதாச்சார அளவுகளில் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டார்.

மேலும், ஊரக பகுதிகளில் முழு துப்புறவு சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...