நகரில் உள்ள அனைத்து குளங்களையும் பராமரிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வலியுறுத்தல்


கோவையில் உள்ள குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சி 21-வது வட்டம் முத்தண்ணன் குளம் உள்பட பல குளங்கள் பல ஆண்டுகளாக நச்சுக்கழிவு நீரால் நிரம்பியுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இந்த நீரில் மிகக் கடுமையான பேக்டீரியாக்கள், அமினோ அமிலங்கள் மிகக் கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குடிக்கவோ, வேறு பயன்பாட்டிற்கோ நீரை உபயோகித்தால், பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. தற்போது, இந்த நீரைப் பயன்படுத்தி வரும் மேற்படி பகுதி மக்களும், கால்நடைகளும் நோய்களுக்கும், பல்வேறு சிரமங்களுக்கும் ஆட்படுவதுடன் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கும் ஆளாக நேரிடும்.



எனவே, முத்தண்ணன் குளம் உள்பட நகரில் உள்ள அனைத்துக் குளங்களிலும், தேக்கி வைத்துள்ள நச்சுக்கழிவு நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். குளங்களுக்கு வரும் நச்சுக் கழிவு நீரை பாதாள சாக்கடையில் இணைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப போர்கால நடவடிக்கை எடுத்து, நிலத்தடி நீர் மேலும் மோசமடையாமல் காக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...