முதியவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அருகே முதியவரை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஆர்.எஸ். புரத்தை அடுத்த பொம்ம நாயக்கன் வீதியில் வசிப்பவர் நடேசன். இவரது தந்தை ராமமூர்த்தி (62). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் இருதயராஜா, பழனியம்மாள் (36) என்ற தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனியம்மாளிடம், ராமமூர்த்தி வீட்டை காலி செய்யுமாறு கூறினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், கோபமடைந்த பழனியம்மாள், ராமமூர்த்தியை கீழே தள்ளினார். இதில், தடுமாறிய அவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராமமூர்த்தி உயிரிழந்தார்.  

இது தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று (அக்.,25) கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழனியம்மாளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...