சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட் திட்டம், விவசாயிகளுக்கு வரம்

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட் 90 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற பயணாளிகள் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி பல்வேறு சிறப்பான திட்டங்கைள செயல்படுத்திவருகின்றது. அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்பொறியியல் துறையின் மூலம் மானியத்துடன் கூடிய சூரிய சக்தியால் இயங்கும் சோலார் மோட்டார் பம்பு செட்டுகள் தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கோயம்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 90  சதவீகித மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும், 5 அல்லது 7.5 அல்லது  10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கப்படவுள்ளது. வேளாண்பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்திட தொழில்நுட்ப ரீதியான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து இறுதி செய்யப்படும். விவசாயிகள் 10 சதவீதப் பங்களிப்புத் தொகை செலுத்தியவுடன் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் 90 சதவீத அரசு மானியத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் அமைத்துத் தரப்படவுள்ளது.

ஆகையால் ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையை அணுகி விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ரேஷன் கார்டு), சிட்டா (பல உரிமையாளர்கள் பெயரிலிருந்தால், விண்ணப்பதாரரின் பெயரில் நிலத்தின் அளவைக் குறிப்பிட்டு வழங்கப்படும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்றுக் கடிதம்), அடங்கல், கிணறு (ஆழ் துளைஃதிறந்த வெளி) உள்ளடக்கிய புல வரைபடம் (புதிய கிணறு எனில் நிர்வாக அதிகாரியால் குறியிடப்பட்டு, சான்றுடன் கூடிய பலவரைபடம்), அருகாமையில் உள்ள புல வரைபடங்களைக் குறிக்கும் டோபோ ஸ்கெட்ச், வட்டார உதவி வேளாண்மை இயக்குநரால் வழங்கப்படும் விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேடு நகல் மற்றும் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம் இரண்டு ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதிகுட்பட்ட உதவிசெயற்பொறியாளர், வேளாண்பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட   சூரிய சக்தி; மோட்டார் - பம்ப் செட் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட சூரிய சக்தி; மோட்டார் - பம்ப் செட் மாடல்கள், விலைகள், மானியம், விவசாயிகளின் பங்களிப்புத்தொகை முதலிய விவரங்கள் தரப்படும். இதனையடுத்து விண்ணப்பித்த விவசாயிகள் தங்;;களுக்கு விருப்பமான சூரிய சக்தி; மோட்டார் - பம்ப் செட் மாடல் மற்றும் நிறுவனங்களையும் தேர்வு செய்யக்கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

இதனால் விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட் மானியத்தில் வழங்கும திட்டத்தில்;, நடப்பு   2017-18ம் நிதியாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மூலம் பெற்றுள்ள இலவச மின் இணைப்பை துறக்க முன்வரும் விவசாயிகளுக்கும், இலவச மின் இணைப்பிற்கான விண்ணப்பம் அளித்திருந்தால் அதனைத் திரும்பப் பெறுவதற்கு சம்மதக்கடிதம் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட விவரங்கள் வேளாண்மைப் பொறியியல் துறை பொறியாளர்களால் சரிபார்க்கப்பட்டு, தலைமை பொறியாளர் (வே.பொ)., சென்னை அவர்கள் மூலமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அனுப்பபடும். பின்னர் இக்கழகத்தால் அனுமதிக்கப்படும் விண்ணப்பங்கள் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தொழில்நுட்ப ரீதியான கள ஆய்வுகள் மேற்கொண்டு, விவசாயியின் பங்களிப்புத் தொகையான 10 சதவீதம் வசூலிக்கப்பட்ட பின்னர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால், சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட் மானியத்தில் அமைத்துத் தரப்படும். 

அவ்வண்ணம் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட் அமைத்துத்தரப்பட்ட விவசாயிகளின் இலவச மின் இணைப்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் துண்டிக்கப்படும். மேலும்  இலவச மின்சாரத்திற்கு விண்ணபித்திருந்த பயனாளி விவசாயிகளின் விண்ணப்பங்களும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் தள்ளுபடி செய்யப்படும்.

ஒரு  செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியீட்டின் படி, சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப் செட் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற விவசாயி திரு. மு.டு. ராமையன் கூறுகையில் 

 நான் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து ஒன்றியம், தொண்டாமுத்தூர் வருவாய் கிராமம், கெம்பனூர் குக்கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி ஆகிய எனக்கு கெம்பனூர் கிராமத்தில் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நீர்ப்பாசன வசதி இல்லாததால் அந்நிலத்தில்; மானாவாரி விவசாயம் செய்து வந்தேன்.

 

விவசாயத்தில் புதுமைகள் புகுத்திட விழையும் என கருதி தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நடைபெறும் விவசாயி தொழில்நுட்ப மேலாண்மை நிறுவன கூட்டரங்கில் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டேன்;. இக்கூட்டத்தில் தமிழக அரசின் புதுப்புதுத் திட்டங்கள் பற்றித் தெரிந்து கொண்டேன்.

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட் 90 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் நான் வேளாண்மைப் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தில்; உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன்.

விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு  செயல்பட்டு வருகின்றது. இந்த அரசின் சீரிய நடவடிக்கையின் மூலம் எனக்கு சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டினை வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் எனது தோட்டத்தில் அமைத்துகொடுத்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும்;, அதனை எப்படி கையாழுவது என்ற விளக்கம் அளித்தனர். என்னுடைய ஆர்வத்தால், நிரந்தரமான நீராதாரத்தையும், எரிசத்தி செலவு வைக்காத சூரியசக்தி மோட்டார் பம்பின் மூலம் முதன்முறையாக பாசனம் செய்து விவசாயம் செய்திடத் துவங்கினேன்.

இதன் விளைவாக தற்போது எனது நிலத்தில் செண்டுமல்லி பூச்செடிகளைப் பயிர் செய்தேன். இந்த பூச்செடிகளுக்கு சூரிய சக்தியுடன் கூடிய  மோட்டார் பம்பின் மூலமாக நீர் பாய்ச்சப்பட்டு நல்ல மகசூலை ஈட்ட முடிந்தது. அதன் மூலமாக எனது வருமானம் அதிகரித்தது. என் மனதில் தன்னம்பிக்கை வளர காரணமாக இருந்த தமிழக அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

Newsletter

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...

Special Weekly Trains Announced Between Sambalpur and Podanur

To cater to the increasing travel demand, Southern Railway will operate weekly special trains between Sambalpur in Odish...

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...