சசிகுமார் கொலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாநகர காவல் ஆணையரிடம் மனு

கோவையில் இந்து முன்னணி மாநகர செய்தி தொடர்பாளர் திரு.சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக, துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது வரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், திரு.சசிகுமார் கொலையில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பரப்படுவதாகவும், அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் அவரது தம்பி திரு.தனபால் (35) இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 

எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்த நிலையில், எனது சகோதரர் கொலை பல்வேறு முன்பகைகளின் காரணங்களால் நடைபெற்றது என்றும், எனது குடும்பத்தினரின் கவுரத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. 

இதனை தடுத்து, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். 

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...