வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதிலறிக்கை

கோவை, அக்டோபர் 28: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உள்ளாட்சத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி பதிலறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், பல்வேறு சேவைத் துறைகளை ஒருங்கிணைத்து பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அரசின் அனைத்துத் துறைகளும் வடகிழக்கு பருவ மழையினை சந்திக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை திசை திருப்பும் வகையிலும், பொது மக்களிடையே ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும், தமிழக அரசின் மீது அவதூறை அள்ளி வீசி மு.க.ஸ்டாலின் வழக்கம் போல அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரைகுறை கருத்துக்களை அள்ளித் தெளிப்பதற்கு முன், வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி ஜெயலலிதாவின் அரசு மேற்கொண்டுள்ள விரிவான நடவடிக்கைகளை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா? ஸ்டாலின் இல்லை என்று சொல்வதால் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் இல்லாமல் போய்விடுமா ? வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழகத்தில் உள்ள நகர்ப்புர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பின்வருமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இதுவரை இந்த ஆண்டில் ரூ.10.31 கோடி மதிப்பிற்கு தூர்வாரும் பணிகளும் சிதிலமடைந்த மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் ரூ.7.43 கோடி செலவினத்தில் பழுது பார்க்கும் பணிகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. 

இந்த கால்வாய்களை தூர்வாருவதற்காகவும் அவைகளில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றவும் 3 ரோபாட்டிக் தூர் அள்ளும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சி சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து ரூ.19.65 கோடி செலவினத்தில் 2016 ஆம் ஆண்டு கொள்முதல் செய்துள்ளது. இந்த மூன்று இயந்திரங்களையும் பயன்படுத்தி கடந்த 6 மாதங்களில் 20 கால்வாய்களிலிருந்து 5754 மெட்ரிக் டன் தூர் மற்றும் ஆகாயதாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த இயந்திரத்தை பயன்படுத்தி 4388 மெட்ரிக் டன் தூர், வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய், வேளச்சேரி ஏரி, மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கேப்டன் காட்டன் கால்வாய்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. 

மழைநீர் வடிகால்களுக்கு இடையே இணைப்பு இல்லாத 92 இடங்கள் கண்டறியப்பட்டு அவைகளில் 11 இடங்களில் பழைய சிதிலமடைந்த மழைநீர் வடிகால்கள் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்டுள்ளன. 81 இடங்களில் புதியதாக மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. மேற்சொன்ன பணியினால் ஆர்.கே. நகர்-தண்டையார் பேட்டை, கொடுங்கையூர், கொளத்தூர், சிட்கோ நகர் - வில்லிவாக்கம், கொரட்டூர், அண்ணா நகர், ராஜ்பவன்-ஸ்ரீநகர் காலனி, சைதாப்பேட்டை, புரசைவாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகள் பயன்பெறும்.

கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1110 வீடுகளும், அடையாறு ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4,134 வீடுகளும் அகற்றப்பட்டு அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டுப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதுடன் தண்ணீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து குறைந்தபட்சம் 75 பணியாளர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற நவீன தகவல் சாதனங்கள் இயங்காமல் போனாலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் வசமுள்ள 1096 வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் தொடர்பினை பரிமாறிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி வசமுள்ள 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் 60 உயர்அழுத்த டீசல் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் தண்ணீர் உள்வருவதை தடுக்கும் பொருட்டு சாலையின் குறுக்கே சிறிய மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

புயல் மற்றும் மழையின்போது சாலையில் விழும் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர் செய்ய, வாகனத்தில்பொருத்தப்பட்ட 2 மரம் அறுக்கும் இயந்திரங்களும், கையில் எடுத்துச் செல்லக்கூடிய, டீசல்/பெட்ரோலினால் இயங்கும் 160 மரம் அறுக்கும்இயந்திரங்களும் மற்றும் மின்சாரத்தினால் இயங்கும் 11 மரம் அறுக்கும் இயந்திரங்களும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற இரவு பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக 18 உயர் கோபுர விளக்குகள் இரவு நேரத்தில் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகள், 176 நிவாரண மையங்கள், 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்கள் ஆகியன தயார் நிலையில் உள்ளன. 1913 என்ற தொலைபேசி எண் கொண்ட புகார் மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை, தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் மொத்தம் 458 எண்ணிக்கையில் 5 குதிரைதிறன் / 7.5 குதிரைதிறன் கொண்ட மோட்டர் பம்புகள், நான்கு பொது சமையல் அறையில், 1500 பேருக்கு சமையல் செய்யும் அளவிற்கு தேவையான பொருட்கள் ஆகியவை ஆயத்த நிலையில் உள்ளன.

52 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் / மாநகர பேரிடர் மீட்பு குழுக்கள் தருவிக்கப்பட்டு அவர்களுக்கென குறித்த பகுதியில்க ளத்தில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு பேரிடர் சமாளிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அந்தந்த வார்டில் உள்ள உதவிப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர், உதவி வருவாய் அலுவலர், காவல்துறை ஆய்வாளர், குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர், மின்சார வாரிய உதவிப் பொறியாளர் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு பருவமழைக் காலங்களில் கூடி பிரச்சனைகளை ஆய்ந்து எல்லா பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

25.10.2017 அன்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...