இஸ்லாமிய தேவாலயங்களில் பணிபுரிவோருக்கு நவ.,1-ம் தேதி உலமா அட்டை வழங்கப்படும்

கோவை, அக்டோபர் 28: பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் போன்ற இஸ்லாமிய தேவாலயங்களில் பணிபுரிவோருக்கான உலமா அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. 

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் (ம) இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல், தர்கா, மதராஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பதிவை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, திருமணம் உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை மற்றும் முதியோர் ஒய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர்களில் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும்.

உறுப்பினரின் பதிவை புதுப்பித்தலுக்கு 01.11.2017 அன்று காலை 10.30 மணி முதல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு, இந்த முகாமானது, ஒரு வாய்ப்பாக அமையும் என்று மாவட்ட ஆட்சியர் திரு.டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...

Special Weekly Trains Announced Between Sambalpur and Podanur

To cater to the increasing travel demand, Southern Railway will operate weekly special trains between Sambalpur in Odish...

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...