கஞ்சா தகராறில் நடந்த கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

கோவை, அக்டோபர் 31: கோவையில் கஞ்சா தகராறில் நடைபெற்ற கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஷங்கர் என்பவரை ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த காந்திவேல் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும், ஷங்கருடன் இருந்த நந்தகுமார் என்பவரையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காந்திவேலுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...