கடனை திருப்பி செலுத்தாத நபரை சரமாரியாக தாக்கிய சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர்: நிலத்தை அபகரித்ததாகவும் புகார்

கோவை, அக்டோபர்.31: கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் லியோ (42). பிராய்லர் கோழி உற்பத்தி தொழில் செய்து வருகிறார். தொழில் நிமிர்த்தமாக காங்கேயம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இவரால் வாங்கிய பணத்தை குறித்த நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில் சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன், பாஸ்கர் லியோவை சரமாரியாக தாக்கியதோடு அவரிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்துள்ளது. 

இது குறித்து பாஸ்கர் லியோ கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது :- தொழில் நஷ்டம் காரணமாக பழனிச்சாமியிடம் வாங்கிய கடனை தன்னால் குறித்த நேரத்தில் திரும்பிச் செலுத்த முடியவில்லை. இதற்காக கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் நடு ரோட்டில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கினார். அதோடு, அவருடன் இருந்த போலீசார் என்னை அருகில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு இழுத்துச்சென்றனர். அங்கு நாள் முழுவதும் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தினார். மேலும், தகாத வார்த்தைகளில் திட்டியதோடு துணை ஆணையர் லட்சுமியின் உத்தரவின்பேரில் தான் இப்படி நடந்துகொள்வதாக தெரிவித்தார்.

சிங்காநல்லூர் பகுதியில் எனக்கு இருக்கும் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை பழனிச்சாமி பெயரில் எழுதித் தருமாறு வற்புறுத்தி தன்னை தாக்கியதோடு எனது மனைவி அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாக மிரட்டினார். தொடர்ந்து, அன்று மாலை தன்னை காவல் நிலையத்திற்கு அலைத்துச்சென்று எனக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார்.

தொடர்ந்து, முனீஸ்வரன் தனது அலுவலகத்தை பூட்டி, எனது வாழ்வாதாரத்தை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளார். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறை ஆணையர் தனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...