86-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை, நவம்பர் 3 : கோவை மாவட்டத்தின் 86-வது வார்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.கே.விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலால், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 



இதன் ஒருபகுதியாக, தெற்கு மண்டலம் 86-வது வார்டுக்குட்பட்ட கரும்புக்கடை, சேரன்நகர் பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, சேமிப்பு குடோன்களில் தண்ணீர் தேங்கியுள்ள பொருட்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதை ஆணையர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார். 



மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு கொசு உற்பத்தி மற்றும் கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வுகளை அவர் ஏற்படுத்தினார். அப்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப. காந்திமதி, நகர்நல அலுவலர் மருத்துவர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு. ரவி ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...