கோவையில் 3-வது மிகப்பெரிய ஹோட்டல் ”லெமன் ட்ரீ” திறப்பு

கோவை, நவம்பர் 3 : ஹோட்டல் ”லெமன் ட்ரீ” இன்று இங்கே தனது பணியை  துவங்கியது . ஹோட்டல் ”லெமன் ட்ரீ” 28 நகரங்களில் 44 கிளைகளை கொண்டுள்ளது.

ஐ.டி.துறை நிறுவனங்கள் கால்பதித்து வரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காளப்பட்டியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலானது, போஸ்ச், காக்னிசெட், டெல் மற்றும் ஹெச்.சி.எல் போன்ற ஐடி நிறுவனங்களின் அருகில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் இருந்து பணி அல்லது ஓய்விற்காக வருபவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 



இந்த ஹோட்டலில், 61 அறைகள் உள்ளன. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய காபி ஷாப் மற்றும் சிட்ரஸ் கஃபே மற்றும் பெரிய ஆலோசனை அறை, உடற்பயிற்சி அறை மற்றும் நீச்சல்குளமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து வெறும் 6 கி.மீ தொலைவிலேயே உள்ளது. இதனிடையே சத்தி மற்றும் அவினாசி தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன. 

இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புலிகள் காப்பகம் ஒருசிறந்த இடமாகும். வெறும் 74 கி.மீ. குன்னூரும், 90 கி.மீட்டரில் உதகையும், 124 கி.மீட்டரில் வால்பறையும் தமிழகத்தின் பிரபலமான மலைப்பகுதிகளாகும். 

கடந்த 2014-ம் ஆண்டு கார்நேஷன் ஹோட்டலும், லெமன் ட்ரீ ஹோட்டலின் மேலாண் நிர்வாகமும், இணைந்து லஷ்ஹானா கன்சல்டட்ன்ஸ் மற்றும் ஹோட்டலியர்சிடம் இந்த ஓட்டலைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 



இதனிடேயே, லெமன் ட்ரீ ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் ரத்தன் கேஷ்வானி கூறுகையில், கோவை மாவட்டமானது, தொழில்வளர்ச்சி பெற்று வரும் இடமாகும். அதிகரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை, மக்களை கவரும் வகையிலான சுற்றுலாத் தளங்கள் போன்றவைகளால், தமிழகத்தில் 2-வது வளர்ந்து வரும் மாவட்டமாக கோவை உள்ளது. தொழில் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உடைய கோவையில், தங்களது ஹோட்டலை விரிவாக்கம் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

தற்போது காளப்பட்டியில் திறக்கப்பட்ட கிளையுடன் சேர்த்து லெமன் ட்ரீ ஹோட்டலானது, 28 நகரங்களில் 44 கிளைகளை கொண்டுள்ளது. கேரளா, பெங்களூரூ, சென்னை,  ஐதராபாத் மற்றும் திருச்சி உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் ஏற்கனவே, தங்களது ஹோட்டல்களை நிறுவியுள்ளது. 



கோவையில் மருத்துவமனைகள், கல்விநிறுவனங்களை இயக்கி வரும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறநெறி அறக்கட்டளையின் ஒரு அங்கமாக லஷ்ஹானா கன்சல்டட்ன்ஸ் மற்றும் ஹோட்டலியர்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...